சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை:

முன்னுரை

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள் மனித வாழ்க்கை என்பது நிலையற்ற நீர்க்குமிழி போன்றது.
வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின்பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும்.
ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டவராயின் அனைத்தும் வீணாகும்.
சுத்தத்தின் அவசியம்
நமது வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியமானதாகும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள்.
நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம் நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும் ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றி ரகசியமாகும்.
ஒரு ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் நாம் எம்மையும் சுத்தமாக வைத்து எமது சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
சுத்தமான காற்று, உணவு கட்டுப்பாடு, தினமும் உடற்பயிற்சி செய்தல் மற்றும் ஒழுங்கான ஓய்வு போன்றவற்றினை நாம் கடைப்பிடிப்பதனால் மட்டுமே எம்மால் ஆரோக்கியமான வாழ்வை வாழமுடியும் சுத்தமில்லா வாழ்க்கை நோய்களை இலகுவில் உண்டாக்கி நம் வாழ்வை இருளாக்கி விடும்.

சுத்தம் சுகாதாரத்தின் நன்மைகள்

நாம் சுத்தமாக இருப்பதனால் எம்மை சுற்றி இருப்பவர்களும் நன்மை அடைவார்கள் சுத்தமாக இருப்பதனால் எம்மால் ஆரோக்கியமான மனிதனாக வாழ முடியும்.
ஒரு குடும்பத்தில் ஒருவர் நோயாளியாக இருந்தால் அது அக்குடும்பத்தையே பாதிக்கும் ஆகவே நாம் ஆரோக்கியமாக இருந்தால் நம்மை நம்பி இருக்கின்ற குடும்பம், பிள்ளைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போன்றவர்களும் சந்தோசமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
எமது வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் எமக்கு உளரீதியாக மகிழ்ச்சி ஏற்படும். சுத்தமான வீடுகள் அமைதியான மனநிலையை உருவாக்கும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நாம் வாழுமிடத்தை சுத்தமாக வைத்திருப்பதனால் நாமும் நலமாக வாழலாம் இக்காலத்தில் மக்கள் நாகரீக போதைக்கு அடிமையாகி மதுப்பாவனை புகைத்தல் போதைப்பழக்கம் போன்றவற்றால் தமது வாழ்வை தாமே சீரழித்து கொள்கிறார்கள்.
போதைகளற்ற நல்ல மனிதர்களை இன்று காண்பது அரிதாகி விட்டது இது பாரிய சீரழிவு நிலையாகும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதே அனைவருக்கும் அதிக நன்மை தரும்.
ஒரு மனிதன் தினமும் உடற்பயிற்சி செய்தல், நடத்தல், ஓடுதல் போன்றனவற்றை செய்வதோடு ஆரோக்கியமான ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்பதனதால் நோயற்ற வாழ்வை வாழ முடியும்.
நலவாழ்வும் சுகாதாரமும்
ஒவ்வொரு மனிதர்களுக்கும் இருக்க கூடிய பொதுவான எதிர்பார்ப்பே தாம் நலமாக வாழவேண்டும் என்பது தான் நலவாழ்வு என்ற அடிப்படையான எண்ணக்கருவையே வளர்ச்சியடைந்த நாடுகள் அடிப்படையாக கொண்டு தமது நாட்டை வளர்ச்சியடைய செய்கின்றன.
சுகாதாரம் என்பது மனிதனுடைய உடல்சார்ந்த ஆரோக்கியம் மற்றும் மனம் சார்ந்தஆரோக்கியம் என்பன தொடர்பானதாகும். ஊட்டசத்துள்ள உணவுகளை உண்ணல், நிம்மதியாக உறங்குதல், மகிழ்ச்சியான குடும்பம், போதுமான வருவாயை தருகின்ற வேலை, தரமான சுகாதார சேவைகளை வழங்கும் வைத்தியசாலைகள் இவை அனைத்தும் கிடைக்க பெறுவதே சிறந்த நலவாழ்வாகும்.
ஒவ்வொரு பிரஜைகளுக்கும் ஆக சிறந்த நல வாழ்வை வழங்குவதே அரசாங்கத்தின் பணியாகும் ஆனால் நமது சமூகத்தில் இவை எல்லா மக்களுக்கும் கிடைப்பதில்லை.
நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு இவர்களது பொருளாதார நிலை அவர்களது சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. இருப்பினும் நாம் எம்மால் முடிந்தளவிற்கு சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும்.

முடிவுரை

மனித வாழ்க்கையே சவாலாகி வரும் இக்கால கட்டத்தில் நாம் விழிப்படைய வேண்டியது அவசியமாகும்.
மனிதனுடைய சராசரி ஆயுட்காலம் குறைவடைந்து வருகிறது இளம் வயதிலேயே கொடூரமான நோய்கள் வந்து இறக்கவும் நேரிடுகிறது இதற்கு காரணம் நாம் தவறான சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதும் சூழலை மாசடைய செய்வதும் ஆகும்.
நாம் எம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் தான் எம்மால் சாதிக்கமுடியும் இதனையே “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம்” என்று கூறுவார்கள்.
ஆகவே நாம் சுத்தம் சுகாதாரம் போன்றவற்றை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.அதன்படி நமது நகரத்தையும் சுத்தம் சுகாதாரத்தில் முதன்மைப் படுத்துவோம்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனது குப்பை எனது பொறுப்பு: