சுத்தம் சுகாதாரம்
சுத்தம் சுகாதாரம் பற்றிய கட்டுரை: முன்னுரை “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள் மனித வாழ்க்கை என்பது நிலையற்ற நீர்க்குமிழி போன்றது. வாழ்க்கையில் நாம் வாழும் நாளில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் சுத்தமாகவும் சுகாதார வழி முறைகளை பின்பற்றி சுத்தமான உணவு தூய குடிநீர் பாதுகாப்பான தங்குமிடம் சிறந்த நலச்சேவைகள் போன்றவற்றை ஒரு மனிதன் பெற்று கொள்கின்ற போது தான் ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ முடியும். ஒரு மனிதன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் செல்வந்தராய் இருந்தாலும் அவர் நோய்வாய்ப்பட்டவராயின் அனைத்தும் வீணாகும். சுத்தத்தின் அவசியம் நமது வாழ்வில் சுத்தம் மற்றும் சுகாதாரம் அவசியமானதாகும் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று கூறுவார்கள். நாம் சுத்தமாக இல்லாவிடில் இலகுவாக நோயாளியாகி விடுவோம் நல்ல ஆரோக்கியம் என்பது மிகப்பெரிய வரமாகும். இதுவே மகிழ்ச்சிக்கும் காரணமாக அமையும் ஆரோக்கியமே ஒவ்வொரு சந்தோசமான மனிதனின் வெற்றி ரகசியமாகும். ஒரு ஆரோக்கியமான மனிதனால் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும் நாம் எம்மையும் சுத்தமாக வைத்து எமது சூழலையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். ...