எனது குப்பை எனது பொறுப்பு:
எனது குப்பை எனது
பொறுப்பு:
முன்னுரை:
எனது குப்பை எனது பொறுப்பு என்பது நாம் அன்றாடம் வீட்டில் மற்றும் வெளியில் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் கழிவு பொருட்கள் ஆகியவற்றை கண்ட இடத்தில் வீசாமல் அதற்குரிய இடத்தில் சேர்ப்பித்தலையே குறிக்கும்.
நாம் நம் இல்லத்தில் தூய்மையை பேணுதல் வேண்டும்.அதோடு நாம் நம்மை சுற்றியுள்ள சுற்றுபுறத் தூய்மையையும் பேணுதலே நமது பொறுப்பாகிறது.
நாம் உபயோகிக்கும் பாலிதீன் மற்றும் மக்கும் அல்லது மக்காத குப்பைகளை நாம் அதற்குரிய இடத்தில் சேர்ப்பித்தலும் நமது பொறுப்பாகிறது.
குப்பைகளும் எமது பொறுப்புகளையும் இக்கட்டுரையில் நாம் ஆராய்வோம்.
"எனது குப்பை எனது பொறுப்பு"
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்க "எனது குப்பை எனது பொறுப்பு"என்ற மக்கள் இயக்கத்தினை வெள்ளிக்கிழமை 03/07/2022 அன்று தொடங்கிவைத்தார்.
கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்ருப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்து கொள்கின்றனர்.இதன் காரணமாக தூய்மை பணியாளர்களுக்கு வேலை பளு அதிகமாகிறது.மக்கள் தங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள வேன்டும்.எனவே பொது மக்கள் கண்ட இடங்களில் குப்பையை கொட்ட வேண்டாம் என்றும் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வாகனங்களில் மக்கும் குப்பை மக்காத குப்பை என்று பிரித்து போட வேண்டும்.மேலும் இது வீடு தேடிவரும் தூய்மை பணியாளர்களுக்கு பேருதவியாக இருக்கும்.குப்பைகள் இல்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றிக்கா ட்ட வேண்டும் என்பன போன்ற அறிவுரைகள் மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
குப்பைகளும் கழிவுகளும்:
நாம் சில உணவு பொருட்களை அல்லது திண்பண்டங்களை வெளியிலிருந்து வாங்கி வருகிறோம்.அதனை நாம் பயன் படுத்திய பிறகு எஞ்சியிருக்கும் மக்கும் அல்லது மக்காத குப்பைகள் கழிவுகள் நாமே அகற்ற வேண்டிய பொறுப்பிலாகிறோம்.
எனது பொறுப்பாகக் கருதி உடனே குப்பைகளையும் கழிவுகளையும் அதற்குரிய தொட்டியில் சேர்ப்பிப்பதன் மூலம் எனது பொறுப்பை நான் நிறைவேற்றியவளாய் ஆகிறேன்.
ஆனால் எனது பொறுப்பில் இருந்து நான் விலகியிருக்கும்பொழுது எனது குப்பைகள்
என் சுற்றுபுறத்தை மாசு படுத்துவதோடு மற்றவர்களுக்கும் இடையூறாக மாறுவதோடு பலவித நோய்களுக்கு ஆரம்ப காரணியாக மாறிவிடுகிறது.
குப்பைகளையும் கழிவுகளையும் என்னால் மற்றும் என் சுற்றத்தாரால் உபயோகித்தவை அனைத்தும் எனது பொறுப்பாகிறது.
என் பொறுப்பை நான் உணர்வதின் மூலம் எனது சுற்றுபுறத்தையும் என்னையும் தூய்மையாக வைத்திருக்க முடியும்.
எனவே எனது குப்பை எனது பொறுப்பாகிறது.
சுற்றுபுறத்தூய்மை:
எனது பள்ளியில் என்னை சுற்றியிருக்கும் குப்பைகள் என்னாலும் மற்ற என் சக மாணவர்களாலும் வந்தவையாக கருதி எனது பள்ளியினையும் நான் சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.
எனது பள்ளியின் தூய்மை எனக்கும் மற்ற மாணவர்களுக்கும் முக்கியமானதே.
அங்கு காணப்படும் குப்பைகளும் எனது குப்பைகளாகவே கருதி அதனை அகற்றுதல் எனது பொறுப்பு எனக் கருதி அதனை அகற்றுவதற்கு என் பள்ளி நண்பர்களோடு சேர்ந்து முயல்வேன்.
சுற்றுபுறத்தூய்மையே நமது தூய்மைக்கும் முக்கியமான ஒன்றாகும்.
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் அறிந்து பிரித்து நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் வீடு தேடி வரும்போது வழங்குதல் நம் அனைவரின் பொறுப்பாகிறது.
அனைவரும் கூடும் இடத்தில் முடிந்தவரை குப்பைகளை தெருவில் வீசாமல் நகராட்சியின் கழிவுத்தொட்டியில் சேர்ப்பிக்க நாம் அனைவரும் நம் வழியில் முயலவேண்டும்.
தூய்மை பணியாளர்களுக்கு முடிந்தவரை வேலைப் பளுவை குறைப்பதற்கு முயல்வோம்.
நாம் ஒவ்வொருவருமே நம் நகரத்தின் மற்றும் சுற்றுபுறத்தின் சுத்தமின்மைக்கு மிக முக்கியமான காரணிகளாவோம்.
எனவே நாம் ஒவ்வொருவரும் முயன்றால் நாம் நமது இல்லம் மற்றும் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதோடு நாமும் நமது தலைமுறையும் ஆரோக்கியமாக வாழலாம்.
முடிவுரை:
சுத்தம் சுகாதாரம் பேணி நடத்தலே அழகியல் ஆகும்.ஆரோக்கியம் ஆகும்.
குப்பைகளை கண்ட இடத்திலும் வீசி அசுத்தம் ஏற்படுவதை தடுத்து விட்டோம் எனில் நாம் மற்றும் நம் நகரம் மற்றும் நம் தமிழகத்தையும் மிகத்தூய்மையாக வைத்திருக்கமுடியும்.
அதுவே நமது ஒவ்வொருவரின் பொறுப்பு என கருத்தில் கொண்டு தூய்மை பேணி நடந்து பாரினில் சிறந்த நாடாய் நமது நாட்டை நிறுத்துவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக